சூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்- வீடியோ

  • 6 years ago
சூரத்தில் கடந்த வாரம் 86 காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாயும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

குஜராத் மாநிலம், சூரத்தில் பேஸ்தான் என்ற பகுதியில் கடந்த வாரம் 9 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிரிக்கெட் மைதானம் அருகே இதுபோன்ற ஒரு உடல் கிடப்பதாக அவ்வழியே நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

அந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவரது உடலில் மரத்தினாலான கட்டையால் ஏற்பட்ட 86 காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் பிறப்புறுப்பிலும் காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்தது.

Recommended