இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு- திடுக் தகவல்- வீடியோ

  • 6 years ago
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இதன்காரணமாக பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.


இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Investigation Department has revealed that counterfeit notes have been increased since the rupee note withdrawal.