இந்தியாவின் வளர்ச்சி பற்றிய ரகுராம் ராஜன் பேச்சு

  • 6 years ago
செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது நீண்டகால நோக்கில் வேண்டுமானால் பயன் அளிக்கலாம், குறுகிய கால அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலாகும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வேகமாக வளர்வது போலத் தோன்றினாலும், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமாகவே உள்ளது என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவிகிதத்திற்கு கூடுதலாக அதிகரிக்கும் பொருட்டு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தார். காரணம் உயர் மதிப்புடைய நோட்டுக்களே கறுப்பு பணம் மற்றும் கள்ள பொருளாதாரம் போன்றவை நாட்டில் வேரூன்றி வளர முக்கிய காரணியாகும்.


Former RBI Governor Raguram Rajan has said that India’s Economy growth is very impressive, but palisade before China's.

Recommended