சக்ஸஸ் ஆன சொடக்கு மேல சொடக்கு பாடல்!

  • 6 years ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலின் லிரிக்கல் வீடியோ, 'மெர்சல்' பாடலை விட அதிக வியூவ்ஸ் கடந்து யூ-ட்யூபில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த சாதனையை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் 'மெர்சல்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சீண்டுவது போல ட்வீட் செய்திருந்தார்.
அனிருத் இசை அமைத்த 'தானா' சேர்ந்த கூட்டம் படத்தின் எல்லாப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து மெகா ஹிட்டானது.
யூ-ட்யூபில் வெளியாகி அதிகமானோர் பார்த்து ரசித்த லிரிக்கல் வீடியோவாக 'சொடக்கு மேல...' பாடல் சாதனை படைத்துள்ளது. ஆனால், தியேட்டரில் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.
தானா சேர்ந்த கூட்டம் படம் தியேட்டரில் சரியாகப் போகவில்லை. அதை மறைப்பதற்காக யூ-ட்யூப் சாதனையை பெரிதுபடுத்துகிறார்கள் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில், இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா, இன்னோவா கார் பரிசளித்ததும் விநியோகஸ்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.


The Lyrical video of the song 'Sodakku mela' from TSK, has created a new record. But, TSK film did not go well in theaters.

#surya #sodakku #anirudh

Recommended