ஸ்கிரிப்ட் ரெடி சிவகர்த்திகேயனை இயக்கவிருக்கும் விக்னேஷ் சிவன்..!!

  • 6 years ago
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை எழுதும் வேலையை துவங்கி கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த படத்தை ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் மூலம் தயாரிக்கிறாராம். எல்லாம் சரியாகப் போனால் வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குமாம்.

Buzz is that Vignesh Shivan is planning to direct Sivakarthikeyan after Thaanaa Serndha Koottam. Vignesh has reportedly started working on his new script and almost completed it. Sivakarthikeyan is currently busy with Ponram's project.

Recommended