• 7 years ago
விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் ஆன படம் 'மெர்சல்'. இந்தப் படத்தில் ஃபிளாஷ்பேக் விஜய்க்கு மகனாக நடித்த ஜூனியர் விஜய் அக்‌ஷந்த் ரசிகர்களால் பயங்கரமாக கொண்டாடப்பட்டார். 'மெர்சல்' படத்தில் செம க்யூட்டாக நடித்த அக்‌ஷந்துக்கும் ரசிகர்கள் உருவாகினர். 'ஆளப்போறான் தமிழன்' பாடலில் விஜய்யும் அக்‌ஷந்தும் ஒரே மாதிரி காஸ்ட்யூம் அணிந்து இணைந்து ஆடி கலக்கினர். 'மெர்சல்' படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர். பெரிய நடிகர்களைத் தாண்டி படத்தில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் விஜய்யின் மகனாக நடித்த அக்‌ஷந்த். இவர் வளர்ந்து விஜய் போல் இருக்கவேண்டும் என்றும் தனது விருப்பத்தை கூறியிருந்தார். நெற்றியில் பட்டை, படிந்த தலைமுடி என பட லுக்கிலேயே இருந்த அக்‌ஷந்த் இப்போது வேறொரு லுக்கிற்கு மாறியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 'மெர்சல்' படத்தில் அம்மாஞ்சியாக சமத்தான குழந்தையாக நடித்த அக்‌ஷந்த்தின் லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் அப்படியே வேற ஸ்டைலில் இருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'Mersal' junior Vijay Akshanth changed over to differenet look.

Category

🗞
News

Recommended