அதிமுக எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயன்ற கணவர் கைது!

  • 6 years ago
அதிமுக திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக அவரது கணவர் வாசுவை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளவர் சத்தியபாமா (45). இவருக்கும் கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வருகிறது. 2016ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, வாசு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், கோபி நகராட்சி தலைவர் ஆன பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்த தொடங்கினீர்கள். கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள். லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு வாசுதான் கொடுத்துள்ளார். அதேபோல் அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ.2 கோடி பெற்றுத்தர வற்புறுத்தினீர்கள். மனம் போன போக்கில் வாசுவை தவிர்த்து 2 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உங்களது செயல்கள் தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என கணவர் வாசு கருதுகிறார். ஆகையால் 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் குற்றறம்சாட்டியிருந்தார் வாசு. இந்த நிலையில், சத்தியபாமாவை, கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்ததாக அவரது கணவன் வாசுவை போலீசார் இன்று கைது செய்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் வசிக்கும் சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்ததாக வாசு கைது செய்யப்பட்டுள்ளார்.

Husband Vasu has been arrested by the police for attempting to stab AIADMK MP Sathyabama.

Recommended