உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டினரும் பல்வேறு நம்பிக்கைகளை சார்ந்து, பல்வேறு சமூக அமைப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது பார்ம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஒரு நாட்டில் சட்டப்படி அங்கீகரித்து எல்லா மக்களும் சர்வ சாதரணமாக பின்பற்றிக் கொண்டிருக்கும் சில நடைமுறைகள் இன்னொரு நாட்டில் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருக்கும். அப்படி சில விசித்திரங்களை கடந்து வந்திருப்பீர்கள். எப்போது உலக நாடுகளில் மிகவும் வினோதமான விசித்திரமான பழக்கங்களை கடைபிடித்து வருகிறவர்களில் சீனர்கள் முதன்மையான இடத்தை பிடிப்பார்கள். சரி, இப்போது சீனாவில் நடைமுறைபடுத்தப்பட்ட வருகின்ற சில வினோதமான பழக்கவழக்கங்கள், சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.