Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/22/2018
இசைஞானிக்கு இளையராஜாவுக்கு எத்தனையோ பெருமைகள் இருக்கின்றன. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து இந்தியாவின் மேஸ்ட்ரோவாக வலம்வருகிற அவருக்கு சமீபத்தில் தான் மத்திய அரசு பத்மவிபூஷன் விருதளித்து கௌரவித்தது. இந்நிலையில், மலையாள சினிமா உலகம் இசைஞானியின் பெயரைப் படத்திற்குச் சூட்டி பெருமைபெற இருக்கிறது. 'இளையராஜா' எனும் டைட்டிலில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநர் மாதவ் ராமதாசன். மலையாளத்தில் சுரேஷ்கோபி, பார்த்திபன் இருவரையும் வைத்து 'மேல்விலாசம்' என்கிற படத்தை எடுத்து சாதனை படைத்தவர் தான் இயக்குனர் மாதவ் ராமதாசன். பத்துப் பதினைந்து கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தப் படத்தை எடுத்தார் மாதவ் ராமநாதன். ஒரே ஒரு கோர்ட் ஹாலில் மொத்தப்படமும் ஒரு விசாரணை வடிவில் நகர்வதாக 'மேல்விலாசம்' படத்தை படமாக்கி இருந்தார் மாதவ் ராமதாசன். அதைத் தொடர்ந்து சுரேஷ்கோபி, ஜெயசூர்யா இருவரையும் வைத்து மருத்துவமனை முறைகேடுகளை மையப்படுத்தி 'அப்போதேகேறி' எனும் படத்தை இயக்கினார். அடுத்ததாக தற்போது 'இளையராஜா' என்கிற படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் மாதவ் ராமதாசன் சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


The famous Malayalam director Madhav Ramadasan will direct a new film titled 'Ilayaraja'. The film's shooting will begin in April.

Recommended