பள்ளி விழாவில் வைத்த லைட்டுகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு- வீடியோ

  • 6 years ago

ஏர்வாடியில் பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு மேடை கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த விளக்குகள் அதிக வெளிச்சம் கொண்டவை என கூறப்படுகிறது. இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

Over 100 students affected by eye problem near in Nellai. Due to annual day light decoration.

Recommended