ப்ரதாபகரா என்ற மிகவும் பின் தங்கிய கிராமம் அது, சீமா கர்ப்பமாக இருக்கிற தகவல் உறுதியானது சீமாவிற்கு இது மூன்றாவது குழந்தை கணவர் ரவி கருவை கலைத்து விடு என்கிறான், காரணம் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் ஏற்கனவே பிறந்த இரண்டுமே பெண் குழந்தைகள் என்பதால் மூன்றாவதும் பெண்ணாக பிறந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு கருவை கலைத்து விடு என்கிறான். கரு உருவாகி 20 வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்கும் நபர் ஒருவரால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது, அங்கே எதிர்பாராத விதமாக சீமாவிற்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்படுகிறது, அங்கிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறாள் தங்கை சினேகா அதோடு அக்காளின் கணவரை போலீசிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என்றும் சொல்கிறாள்.