மிஷ்கினின் அடுத்த படத்தில் சாய் பல்லவியும், நித்யா மேனனும்- வீடியோ

  • 6 years ago
இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்க உள்ளார்.

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்திற்கு பிறகு 'சவரக்கத்தி' படத்தில் நடித்த மிஷ்கின் தனது அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் 'மெர்சல்' நாயகி நித்யா மேனனும், 'பிரேமம்' நாயகி சாய் பல்லவியும் நடிக்க இருக்கிறார்களாம். விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் அவரது தம்பி ஆதித்யா இயக்கிய 'சவரக்கத்தி' படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு கதை எழுதியது மிஷ்கின் தான். 'சவரக்கத்தி' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், மிஷ்கின் இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சாந்தனு நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. இயக்குனர் மிஷ்கின், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், சாந்தனு ஆகியோர் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்து புதிய கூட்டணியை நேற்று உறுதி செய்தார் சாந்தனு. நித்யாமேனன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திரையுலகினரின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.


Mysskin to direct shanthanu in his next film. In this film, Nithya menon will be acted as heroine. And Sai pallavi will do a prominent role.

Recommended