நித்யா மேனன் தில் பேட்டி

  • 6 years ago
கதை, திரைக்கதையில் தலையிடுவது தப்பு இல்லை என்கிறார் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். தெலுங்கில் அவே படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். நித்யா மேனனிடம் கதை சொல்லப் போனால் அவர் குறுக்கிட்டு கதையை மாற்றுவதாக இயக்குனர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து நித்யா கூறியிருப்பதாவது, இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால் நான் அதில் குறுக்கிடுவதாக கூறப்படுவது உண்மையே. என்னிடம் 200 பேர் கதை சொல்ல வந்தால் அதில் 4 அல்லது 5 கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன். திரைக்கதை மட்டும் அல்ல வசனத்திலும் தலையிடுகிறேன். நிறைய வசனங்கள் நான் சொல்லிக் கொடுத்தவையாகவே இருக்கும். இவ்வாறு தலையிட்டு மாற்றம் செய்வதை தவறு என்று நான் நினைக்கவில்லை. மெர்சல் போன்ற படங்களில் நான் வயதுக்கு மிஞ்சிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறுகிறார்கள். கதை பிடித்துவிட்டால் எப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரமானாலும் நடிப்பேன். ஓரினச்சேர்க்கையாளராக நடித்ததில் கூட எனக்கு வருத்தமே இல்லை என்கிறார் நித்யா மேனன்.


Nithya Menon explained in detail as to why she accepted to act in Vijay starrer Mersal. She said that she wants to act in different types of movies and has plans to direct a film in the future.

Recommended