சக்கர நாற்காலியால் உட்கார்ந்திருக்கிறவனால் என்ன செய்திட முடியும் என்று கேள்வி எழுப்பியவர்கள் முன்னால் நம்மால் எட்டிப் பிடிக்க முடியாத, அறிவியல் கோட்பாடுகளை எல்லாம் உருவாக்கி மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். டைம் மெஷின்,ப்ளாக் ஹோல்,ஏலியன் குறித்தெல்லாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief Histroy of Time என்ற புத்தகம் தமிழ் உட்பட 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கன்னத்தில் இருக்கும் சில தசைகள் மட்டுமே அசையும், அதைத் தவிர பிற உடல் பிற பாகங்கள் எல்லாம் செயலிழந்து விட்டது. இந்த நிலையில் சென்சார் பொருத்தப்பட்ட கண்ணாடியுடன் கணினியுடன் இணைக்கப்பட்ட வீல் சேரில் உட்கார்ந்தபடி அறிவியல் உலகத்தையே தனதாக்கிக் கொண்டார். உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என்று போற்றப்படும் ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் தன்னுடைய 76வது வயதில் இன்று காலமானார்.