பேரறிவாளன் எல்டிடிஇ அனுதாபி... சுப்ரீம் கோர்ட்- வீடியோ

  • 6 years ago
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும் ? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பேட்டரியை கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்று மின்னணு டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு தெரியாதா? என்றும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துக் காட்டி அவரது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

Former Prime Minister Rajiv Gandhi was assassinated on the night of May 21, 1991 at Sriperumbudur.The CBI has told the Supreme Court that AG Perarivalan’s plea should be dismissed as it was devoid of any merits.

Recommended