தந்தை பெரியார் 'திராவிடஸ்தான்' தனிநாடு கோரி பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என பாஜக தேசிய செயலர் எச். ராஜா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பின்னர் அட்மின்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என கூறி வருத்தம் தெரிவித்தார் எச். ராஜா. தற்போது பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், பெரியாரை 'நாயக்கர்' என ஜாதிப் பெயருடன் குறிப்பிட்டு ஒரு பதிவைப் போட்டுள்ளார்.