தமிழகத்தில் அழிக்கப்பட்ட பெண்கள்... !!- வீடியோ

  • 6 years ago
இன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், வாட்சப் மற்றும் முகநூல் முழுவதும் மகளிர் தின வாழ்த்துக்கள் தான் குவிந்து கொண்டிருக்கிறது. ஆரம்ப நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான அலுவலகங்களில் எல்லாம் ஆண்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற சட்டம் இருந்தது. பெண்களுக்கு வீட்டு வேலைகளை தான் செய்ய அனுமதி, குறிப்பாக அவர்களுக்கு ஆரம்ப கால கல்வி கூட வழங்கப்படாமல் இருந்து. தொடர்ந்து காலப்போக்கில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் ஆண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், சமமான ஊதியம் கிடைக்கவில்லை. தங்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகள் சலுகைகள் வழங்க வேண்டி போராட்டம் நடத்துகிறார்கள் பெண்கள். தொடர்ந்து பெண்கள் உரிமை மாநாடு நடத்தப்படுகிறது, அதில் பங்கேற்ற ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த க்ளாரே செர்கினே என்பவர் மார்ச் எட்டாம் தேதியை உலக மகளிர் தினத்தை கொண்டாட பெண்களை வலியுறுத்துகிறார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

Status Of Women In TamilNadu