நெட்டிசன்ஸை ஒழிக்க சபதம் எடுத்திருக்கும் பிக் பாஸ் காயத்ரி!- வீடியோ

  • 6 years ago
சமூக வலைதளங்களில் அசிங்கம் அசிங்கமாக பேசுபவர்களுக்கு காயத்ரி ரகுராம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் என்ன கூறினாலும் நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்கிறார்கள். சில புகைப்படங்கள், ட்வீட்டுகளை பார்த்து அசிங்கமாக கமெண்ட் போடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள் என்று காயத்ரி சொல்லியும் யாரும் கேட்கவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லை என்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். சத்தியமாக செய்வேன். அது தனி நபராக இருந்தாலும் சரி இல்லை காசு கொடுத்து பணியமர்த்தப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சரி. என்னை, ஜூலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி என்று காயத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது ட்வீட்டுக்கு வந்த கமெண்ட்டை பார்த்த காயத்ரியோ, முடியாது நான் பயப்பட மாட்டேன். அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன். பொறுமையை சோதித்துவிட்டனர். நான் பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் அது போன்று அவர்களும் என்னை தொந்தரவு செய்யாமலும், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமலும் இருக்க விரும்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார். நல்லா சொன்னீங்க காயத்ரி. இந்த வெட்டிப்பயளுகளில் சிலரை சிறைக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.


Gayathri raghuram tweeted that, 'Cyber bullying and bad words have to end on social media today or I will give complaints to cyber crime and will find u. Will punish the person and I swear I will do it wether it is hired company or a individual. Wether it's me or Julie or any one.'

Recommended