மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது!- வீடியோ

  • 6 years ago
முதல் முறையாக இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குகிறது கர்நாடக அரசு.

இயக்குநர் மணிரத்னம் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தது கன்னடப் படத்திலிருந்துதான். அவர் இயக்கிய முதல் படம் பல்லவி அனு பல்லவி. 1983-ல் வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். அனில்கபூர், லட்சுமி, கிரண் வைராலே நடித்திருந்தனர். அதன் பிறகு மணிரத்னம் கன்னடத்தில் படங்கள் பண்ணவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தியில்தான் பல படங்கள் செய்தார்.

இப்போது கர்நாடக அரசு மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருதினை அறிவித்துள்ளது. இந்த விருதை கர்நாடக அரசும், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளன. முதல் விருதே மணிரத்னத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூர் விதானசவுதாவில் முதல்வர் சித்தராமய்யா இந்த விருதினை மணிரத்னத்துக்கு வழங்குகிறார். ரூ 10 லட்சம் மற்றும் விருதுப் பட்டயம், கேடயம் ஆகியவை இந்த விருதுடன் வழங்கப்படும்.

Bangalore International Film Festival and the Karnataka Govt have introduced Life Time Achievement Award from this year. For the first time The Hon Chief Minister of Karnataka has announced the award to Director Mani Ratnam.

Recommended