பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் வேண்டும்- டிஐஜி வனிதா- வீடியோ

  • 6 years ago
பள்ளிகளில் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் இல்லததால் தான் திருட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக காவல்துறை துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காவல்துறை துணை தலைவர் வனிதா பங்கேற்றார். அப்போது மாணவகளிடம் பேசிய அவர் தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்றசம்பவங்கள் 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் தான் அதிகம் ஈடுபடுவதாக கூறினார். மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் இயந்திரமாக செயல்படுவதாகவும் விளையாட்டாக திருட தொடங்கும் மாணவர்கள் பின்னர் அதையே தொழிலாள கொண்டுள்ளதாகவும் கூறினார். மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமே பள்ளிகளில் முன்பு நடத்தப்பட்டு வந்த நீதி போதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதான் என்றும் அனைத்து பள்ளிகளிலும் நீதி போதனை வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வனிதா கூறினார்.

Recommended