தெய்வமகள் அண்ணியாருக்கா எண்டு கார்டு போட்டீங்க..? இதோ திரும்பி வந்துட்டாங்கல்ல..!!

  • 6 years ago
தெய்வமகள் தொடர் புகழ் அண்ணியாருக்கு என்டு கார்டே இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. அண்ணியாரை பிரகாஷ் சுட்டுக் கொன்றதுடன் கதை முடிகிறது.

தெய்வமகள் சீரியல் பற்றியும், அண்ணியார் பற்றியும் நெட்டிசன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் அடுத்து நந்தினி தொடரில் மாதவியாக வந்து உங்களின் கவனத்தை ஈர்ப்பார். அண்ணியாருக்கு என்டு கார்டே இல்லடா.

காயத்ரிக்கு மட்டும் தான் என்டு. நான் அடுத்து மாதவியாக வருகிறேன். எனக்கு என்டே இல்லடா.

எதிர்காலத்தில் குழந்தைகள் அண்ணியாருக்கு 7 உயிர் என்று பேசுவார்களாம்.

5 வருஷமாக ஓடிய தெய்வமகள் தொடரில் சீக்கிரமே நடந்த ஒரே விஷயம் பிரகாஷுக்கு தாடி வளர்ந்தது தான்.

அண்ணியாரை டிவியில் சுட்டுக் கொன்றதற்கு ஏதோ நிஜத்தில் நடந்தது போன்று பல இல்லத்தரசிகள் ஃபீல் பண்ணியிருக்கிறார்கள்.

தெய்வமகள் அண்ணியார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இப்படி மீம்ஸ் போட்டுள்ளார்கள்.

Netizens are discussing about Deivamagal TV serial and Anniyar Gayathri. Anniyar will continue to entertain you as Madhavi in Nandhini serial.

Recommended