வருங்கால கணவர் ஆறடி உயரம் இருக்க வேண்டும் : ரகுல் ப்ரீத் சிங்

  • 6 years ago
தனது வருங்கால கணவர் ஆறடி உயரம் இருக்க வேண்டும் என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோயினாக உள்ளவர் ரகுல் ப்ரீத் சிங். தீரன் அதிகாரம் ஒன்று படம் ஹிட்டானதால் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளார். பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் அவருக்கும், நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. தனது வருங்கால கணவர் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். என் வருங்கால கணவர் கட்டாயமாக ஆறடி உயரம் இருக்க வேண்டும். ஒரு இன்ச் குறைந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

Actress Rakul Preet Singh said in an interview that she wants her future husband to be six feet tall. She is not ready to accept him even if he is an inch shorter than that.

Recommended