அல்வா கடை திறந்த பாஜக!- வீடியோ

  • 6 years ago
முதல்வர் நாராயணசாமியை கண்டித்து அம்மாநில பாஜகவினர் அல்வா விற்பனை செய்து நூதன போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறில்லை என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த 7ஆம் தேதி பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி பக்கோடா, பஜ்ஜி விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.




BJP workers were selling Halwa against Puducherry Chief minister Narayanasami. Puducherry Chief minister was making Pakkoda against Prime minister Modi.

Recommended