டைம்லைன் கேட்டு மத்திய அரசை நெருக்கும் சந்திரபாபு நாயுடு- வீடியோ

  • 6 years ago
ஆந்திர மாநிலத்திற்கு எனந்னமாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது, என்ன திட்டங்களை செயல்படுத்த உள்ளீர்கள் என்பதை கால அட்டவணையோடு தெரியப்படுத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா உருவாக்கப்பட்டது. ஆந்திராவுக்கு பல சலுகைகள் அறிவிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்திருந்தார். 2016ல் தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது அறிவிப்பில், ஆந்திராவுக்கு சிறப்பு பொருளாதார பேக்கேஜ் வழங்கப்படும் என்றார். ஆனால் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை.
2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டில், மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்கும், புதிய தலைநகரமாக உருவாகும் அமராவதி கட்டுமானத்திற்கு நிதி உதவி வழங்கும் என எதிர்பார்த்த பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே ஆந்திர எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது கூட இவர்கள் கோஷங்கள் நிற்கவில்லை.



Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu said The Centre should clearly spell out what it has done for the state in the last four years and what it will do now. It should announce a plan of action with clear timelines," Naidu said.

Recommended