குற்றவாளிகளுக்கு நீதிபதி கொடுத்த வித்தியாசமான தண்டனை- வீடியோ

  • 6 years ago
ஹரியானாவில் 2015ல் கல்லூரி மாணவி ஒருவரால் பதியப்பட்ட வழக்கில் இந்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் அங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் தன்னுடைய நண்பர்கள் மீது பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடந்தது. கீழ் கோர்ட் தீர்ப்பு வழங்கி பின் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இதில் வித்தியாசமான ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 3 பேரும் தங்கள் மொபைல் பாஸ்வேர்டை அந்தப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக எல்லா ஆதாரமும் இருந்தது. புகைப்பட ஆதாரங்களும் இருந்தது. இதனால் கீழ் கோர்ட் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கியது.

Recommended