12 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்..வீடியோ

  • 6 years ago
காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான பனிமூட்டம் நிலவி வரகிறது. பகல் நேரங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இரவு நேரங்களில் கடுமையான குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்தது. இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம், வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்திலும் மழை பெய்தது. இதேபோல் கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மதுரையிலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது. சென்னை, கோவை, நெல்லை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai meteorological center says 12 districts of Tamilnadu will get rain due to low depression in the bay of bengal. Chennai and other districts getting rain from yesterday.

Recommended