முதியவரை 25 முறை கன்னத்தில் அறைந்த நபர்-வீடியோ

  • 6 years ago
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அடிக்கடி முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு அதிக அளவில் முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முஸ்லீம் முதியவர் ஒருவர் இளைஞர் ஒருவரால் மோசமாகத் தாக்கப்பட்டு இருக்கிறார். 25 முறை அவர் கன்னத்தில் அறையப்பட்டுள்ளார். இது வீடியோவாக தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகியுள்ளது.

இந்த வீடியோ வினய் மீனா என்ற 18 வயது நபரால் பேஸ்புக்கில் ஏற்றப்பட்டு உள்ளது. அவர்தான் அந்த முஸ்லீம் முதியவரை 25 முறை கன்னத்தில் அறைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லும் படி கூறியுள்ளார்.

Recommended