என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி- வீடியோ

  • 6 years ago
சமீப காலங்களில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டில் தங்கள் மகள் வாழ்வது பலருக்கு பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது. தமிழ் சினிமா கூட என்.ஆர்.ஐ ஆண்களை காமெடியன்களாக மட்டுமே காட்டி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் குரூரம் தற்போது வெளியாகி இருக்கும் கணக்கெடுப்பு மூலம் தெளிவாகி இருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறைக்கு எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளது, என்ன மாதிரியான புகார்கள் இதுவரை வந்து இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2015 ஜனவரி 1ல் இருந்து நவம்பர் 30, 2017 இடையே இருக்கும் 1,064 நாட்களில் மொத்தம் 3,328 பெண்கள் தங்கள் கணவன் குறித்து புகார் அளித்து இருக்கிறார். சராசரியாக ஒருநாளைக்கு 3 புகார்கள் வருகிறது. சரியாக சொல்வதென்றால் 8 மணி நேரத்திற்கு ஒரு புகார் வருகிறது.




The Ministry of External Affairs of India (abbreviated as MEA) says that for every 8 hours one Indian NRI wife calls home for help. They mostly belong to Punjab, Andhra, Telugana and Gujarat region.

Recommended