பாஜகவின் செல்வாக்கை செல்லாக்காசாக்க சித்தராமையா முழு வீச்சு- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் திமுகவின் மாநில முன்னுரிமை, தமிழ் மொழி முன்னுரிமை கொள்கைகளில் சிக்கி, காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததை போல இப்போது, பாஜகவின் செல்வாக்கை செல்லாக்காசாக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 1985ம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சி காலத்திற்கு பிறகு கர்நாடகாவில், தொடர்ந்து மீண்டும் அதே முதல்வர் தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது கிடையாது. ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எடுத்துள்ளனர். அதை இந்த முறை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வரான சித்தராமையா தீவிரமாக உள்ளார்.

இதற்காக அவர் தமிழகத்தில் திமுக ஆரம்ப காலகட்டங்களில் எடுத்ததை போன்ற மாநிலம், மொழி சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி பாஜகவை பந்தாட தொடங்கிவிட்டார். மேலும், பாஜக பிற மாநிலங்களில் என்ன மாதிரி பிரச்சாரங்களை முன்னெடுத்து காங்கிரசை வீழ்த்தியதோ, அதேபோன்ற பிரச்சாரங்களை கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக சித்தராமையா முன்னெடுத்துள்ளார்.



Assembly elections will be held in Karnataka in the next few months. Siddramaiah also tried to set the agenda for Modi's speech, asking him taking a position on the uncomfortable Mahadayi dispute.

Recommended