வன்முறையில் முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் குடியரசு தின ஊர்வலம்- வீடியோ

  • 6 years ago
குடியரசு தின விழா அன்று பாஜக ஆளும் மாநிலங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ''மூவர்ண கொடி ஊர்வலம்'' நடத்தியது. இதை ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள். இதில் உத்தர பிரதேசத்தில் நடந்த ஊர்வலம் கலவரத்தில் முடிந்து இருக்கிறது. பல பேர் இந்த கலவரம் காரணமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்த விசாரணை தற்போது உபியில் தொடங்கி இருக்கிறது. இன்னும் இதுபோன்ற யாத்திரை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த யாத்திரை முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உபி பகுதிகளில் நடத்தப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது கொஞ்ச நேரத்தில் உபி முழுக்க கலவரமாக முடிந்து இருக்கிறது.
இதில் சந்தன் குப்தா என்ற 22 வயது இளைஞர் மரணம் அடைந்தார். இதனால் கலவரத்தின் நிலை மிகவும் மோசமானது. பல கடைகள், கார்கள், பைக்குகள் கொளுத்தப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் துப்பாக்கி சூடு வேறு நடத்தி இருக்கிறார்கள்.

தற்போது இது சம்பந்தமாக இரு பிரிவை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யோகி தலைமையிலான உபி அரசு அறிவித்து இருக்கிறது. மரணம் அடைந்த சந்தன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

VHP's ‘tiranga yatras’ in UP creates huge clash between VHP and Muslim people. More than 100 men arrested in this issue. VHP says that they will organise more ‘tiranga yatras’ in UP.

Recommended