சைக்கிளில் வந்து போராட்டம் நடத்திய நடிகர் சரத்குமார்- வீடியோ

  • 6 years ago
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி சென்னையில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிப்பொருள் விலையேற்றம், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியது. சுமார் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை திரும்ப பெற கோரி மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சியினரும் பேருந்து கட்டணத்தை திரும்ப பெற கோரி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அதன் தலைவர் சரத்குமார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு போராட்ட மேடைக்கு வந்தார்.




Samathuva Makkal Party conducts protest under the leadership of Sarathkumar in Chepauk against bus fare hike.

Recommended