மாட்டு வண்டியில் வந்து போராட்டம் நடத்திய விஜயகாந்த் மனைவி- வீடியோ

  • 6 years ago
திருவள்ளூர் பஜார் வீதியில் தே.மு.தி.க. மேற்கு மாவட்டம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சேகர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர், மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் மக்களுக்காக இறங்கி போராடும் கட்சியாக தே.மு.தி.க. உள்ளது. பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சொன்னவுடன் ஆட்சியாளர்கள் பஸ் கட்டணத்தை குறைத்தது எங்களது பலத்தை காட்டுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு திருவள்ளூர் தேரடியில் இருந்து பிரேமலதா விஜயகாந்த் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார்.

dmdk vijayakanth's wife premalatha protest in thiruvalluvar against bus fare hike.

Recommended