தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். திடீர் பேரணி- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் பல இடங்களில் திடீரென பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பேரணி நடத்தினர். சென்னையில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, நடிகர் விசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிகளுக்கு பொதுவாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. வட மாநிலங்களில் மதவன்முறைகளுக்கு அடிப்படையாக இருப்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிகள்தான். லக்னோவில் தற்போது நடைபெற்று வரும் மதவன்முறைகளுக்கு காரணமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணி. இப்படி பேரணிகளை நடத்தி அதன் மூலம் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி கலவராமாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் பாஜகவின் வியூகம்.

இதனால்தான் தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான அரசுகள் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்கு அனுமதி தருவதில்லை. ஜெயலலிதா மறைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறி ஓபிஎஸ் அரசு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தது.

தற்போது ஆண்டாள் விவகாரம், தமிழ்த் தாய் வாழ்த்தை காஞ்சி சங்கரச்சாரி விஜயேந்திரர் அவமதித்தது என கொந்தளிப்பான நிலை இருந்து வருகிறது. இதை அரசியலாக்கி ஆதாயம் தேடவும் பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

Rashtriya Swayamsevak Sangh activists on Sunday took out a route march in TamilNadu.

Recommended