சென்னையில் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர்களை கைது செய்த போலீசார்- வீடியோ

  • 6 years ago
திருவொற்றியூரில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்களை போலீசார் விரட்டி சென்று கைது செய்துள்ளனர். அவர்களின் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் வடமாநில இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரி பகுதியில் துப்பாக்கிகளுடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 20 துப்பாக்கி குண்டுகள், 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில், அவர்களின் பெயர் பிரதீப், கமல் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியரசு தினவிழாவை சீர்க்குலைக்க அவர்கள் ஏதும் சதித்திட்டம் தீட்டியுள்ளனரா என்ற ரீதியில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

2 North Indian youngsters were arrest for having pistols in chennai. CBCID Police is have took them in remand and investigating about the arms. As Republic day celebration are high in the country, the arrest must be considered says police.

Recommended