சென்னையில் போலீசார் தாக்கியதால் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு- வீடியோ

  • 6 years ago
போலீசார் அடித்ததால் மனமுடைந்து தீக்குளித்த வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 22 வயதான இந்த இளைஞர் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு ட்ராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி சென்னை ஓஎம்ஆர் சாலையில் மணிகண்டன் காரை ஓட்டிச் சென்றார். அப்போது எஸ்ஆர்பி டூல்ஸ் என்ற இடத்தில் மணிகண்டனின் காரை போலீசார் வழிமறித்தனர்.

சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி அவரை போலீஸார் 4 பேர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சரமாரியாக தாக்கினர். பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டதால் மனமுடைந்த அந்த இளைஞர் காரில் இருந்த பெட்ரோலை எடுத்து போலீசார் முன்னிலையிலேயே தீக்குளித்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்து இளைஞரை மீட்டனர். உடல்கருகிய நிலையில் படுகாயமடைந்த அந்த இளைஞர் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

A youth who fired himself died today. A 22 years old travel agency driver named Manikandan fired himself by the insult and the attack of Police in OMR on 24th of this month.

Recommended