விஜேந்தரரை கண்டித்து ஆர்பாட்டம்- வீடியோ

  • 6 years ago
தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது அமர்ந்திருந்த காஞ்சி இளைய மடாதிபதி விஜேந்தரருக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜேந்தரர் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்றார் ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது நிற்காமல் அமர்ந்து இருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது . தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது எழுந்து நிற்காத அவருக்கு அரசியல் அக்கட்சிகள் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் .ஆனால் விஜேந்தர் தரப்பில் கடவுள் வாழ்த்து இசைக்கப்படும் போது தியானத்தில் இருப்பது வழக்கம் அதனால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்ட போது விஜேந்தர் தியானம் செய்தார் என்றும அதனால் தான் எழுந்து நிற்க வில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது . இருப்பினும் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த விஜேந்தர் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றும் அவருக்கு கண்டனம் தெரிவித்தும் காஞ்சி மடாதி பதி பீடத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது .

Des : Kanchi Junior Chief Minister Vajendar, who sat in the Tamil mother's greeting, protested in various Tamil Nadu organizers

Recommended