முதல்வர் இல்லம் முற்றுகை!- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பிற மாநிலங்களைக் காட்டிலும், உயர்விற்கு பின்பும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவு என்றும், வேறு வழி இல்லாமல் கட்டணம் உயர்தப்பட்டதாகவும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், பொதுமக்கள் இதனை ஏற்க தயாராக இல்லை. இதுகுறித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் மாணவர்கள் எப தமிழகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனே அதை திரும்பப் பெறக்கோரியும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிராட்வே பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடியார் இல்லத்தை முற்றுகையிடவும் மாணவர்கள் முயற்சித்தனர். இதனை தடுத்து சிலரை போலீசார் கைது செய்தனர்.

அதுபோல பல இடங்களில் அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராடி வருவதால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால், இதுகுறித்து அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறது.


Recommended