புதுச்சேரி அரசுப் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு - பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி

  • 6 years ago
புதுச்சேரி அரசுப் பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, பேருந்து கட்டண உயர்விற்கான கோப்பிற்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருந்த நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் நகர்புறம் மற்றும் புறநகர் பேருந்திற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைந்தபட்ச கட்டணம், 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து, 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அன்றாட பிழைப்பிற்காக ஓடும் எங்களுக்கு, இந்த கட்டண உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், தனியார் பேருந்துக்கு நிகரான இந்த அரசு பேருந்து கட்டணத்தை குறைக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதுச்சேரி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளே அதிக அளவில் இயக்கப்படும் நிலையில், இந்த விலை உயர்வு, ஏழை, எளிய பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended