வலுக்கும் மாணவர்கள் போராட்டம்… புரட்சி வெடிக்கும் அபாயம்…வீடியோ

  • 6 years ago
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மூன்றாவது நாளாக தமிழகம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

தமிழக அரசு கடந்த வாரம் பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியது நகர மாநகர பேருந்து கட்டணம் மட்டும் இல்லாம் வெளியூர் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தபட்டது . இதனால் பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினார்கள் சாதாரணமாக ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் பேருந்து பயணத்தில் செலவாவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . தீடிரென அறிவித்த பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள் பொதுமக்கள் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் ராமநாதபுரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .மூன்றாவது நாளாக இன்றும் தஞ்சை கும்பகோணம் சென்னை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் பேருந்துகளை வழிமறித்தும் சாலை மறியலில் ஈடுபட்டும் வருகின்றனர் . இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க முற்றபட்ட காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இந்நிலையில் தமழிக அரசு கட்டண உயர்வை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Des : Students of Tamil Nadu have been protesting for the third day of the bus tariff hike

Recommended