போலீசார் அடித்ததால் கார் ஓட்டுநர் தீக்குளிப்பு- வீடியோ

  • 6 years ago
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீசார் அடித்ததால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முற்றிலும் எறிந்த நிலையில் கார் ஓட்டுனர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஹாலிடே இன் விடுதிக்கு அருகில் கார் ஓட்டுநர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஓட்டுநரின் தற்கொலை முயற்சி சம்பவத்திற்கு போலீசாரே காரணம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். நடுரோட்டில் போலீசாரை கண்டித்து கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended