சசிகலா பாவம், விஜயகாந்த் பேச்சு- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் அனைத்து குற்றங்களுக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் காரணம் என்றும் சசிகலா பாவம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த் பட்டாசு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் ஆட்சி நடத்திய மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் என்றும் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளது பாவம் என்றார். இடையில் பதவி ஏற்று நடைபெற்று கொண்டிருக்கும எடப்பாடி அரசு விரைவில் கவிழும் என்றார்.

Des : Tamil Nadu Chief Minister Jayalalithaa has said that all the crimes in Tamil Nadu are the cause of Sasikala's sin, said DMK leader Vijayakanth.

Recommended