படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • 6 years ago
படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் மகேந்திரன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யின் தெறி படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் புகழேந்தி என்னும் நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் அருள்நிதிக்கு அப்பாவாக நடிக்கிறார். கரு. பழனியப்பன் இயக்கும் புகழேந்தி என்னும் நான் படத்தின் பட்பிடிப்பு புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று படப்பிடிப்பு நடந்தது. அப்போது மகேந்திரன் திடீர் என்று மயக்கம் போட்டு விழுந்தார். இதை பார்த்த படக்குழு அதிர்ச்சி அடைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. மகேந்திரனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Director cum actor Mahendran is hosptalised after he fainted in the shootingspot of 'Pughalenthi Ennum Naan', directed by Karu Palaniappan. He is playing the role of hero Arulnithi's father in the film.