'கன்னடத்து பாக்யராஜ்' மறைவு!

  • 6 years ago
பிரபல கன்னட இயக்குனரும், நடிகருமான காசிநாத் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காசிநாத் உயிரிழந்துள்ளார். இவர் கன்னடத்து பாக்கியராஜ் என்று அழைக்கப்பட்டவர். இவரது மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் கன்னடப் படங்களும் தமிழில் டப் ஆகி வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றன. அவற்றில் 80-களில் வந்த 'முதல் இரவே வா வா' ஆகிய படம் முக்கியமானது. இந்தப் படத்தை இயக்கி, நாயகனாக நடித்தவர் காசிநாத். இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா. இவர் தமிழில் விஷால், நயன்தாரா ஆகியோர் நடித்த 'சத்யம்' படத்தில் நடித்துள்ளார். 11 கன்னடம், 3 தெலுங்கு மற்றும் 1 இந்தி படத்தைத் தயாரித்து உள்ளார். இவர் கடைசியாக 'சவுக்கி' என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிநாத் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். காசிநாத்தின் மறைவுக்கு கன்னடத் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Famous Kannada director and actor Kasimath passed away. He has acted 'Andha 7 naatkal' and 'Chinna veedu' of Bhagyaraj in Kannada. Thus, he was also known as 'Kannada's Bhagyaraj'.

Recommended