கொள்ளையன் நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம்

  • 6 years ago
கொள்ளையன் நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். பல நாட்களாக போக்கு காட்டிக் கொண்டு இருந்த இவனை 4 நாட்களுக்கு முன் ராஜஸ்தான் போலீஸ் கைது செய்தது. தற்போது இவனை ராஜஸ்தான் போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மேலும் இவன் விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட இருக்கிறான். ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் இவன் பல முக்கிய உண்மைகளை கூறியதாக தெரியவந்து இருக்கிறது. இவனிடம் இன்னும் சில வாக்குமூலங்கள் வாங்கப்பட உள்ளது.

சென்னையில் இருக்கும் கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் குற்றச்சாட்டப்பட்டான். மேலும் நாதுராம் கூட்டாளி தினேஷ் சவுத்ரியும் உடந்தையாக செயல்பட்டான். இவர்களை போலீஸ் தேடிவந்தது.

மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தன்னுடைய குழுவை அழைத்துக் கொண்டு இவனை தேடி ராஜஸ்தான் சென்றனர். அப்போது அவனின் உறவினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். ராஜஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெரியபாண்டியன் கொல்லப்பட்டார். நாதுராம் தப்பி ஓடினான்.

Nathuram gives statement on Inspector Periyapandiyan's death. He says that he didn't kill Periyapandiyan. He also added that he run away from that place after hearing the gun shot sound

Recommended