பெங்களூரில் அதிதீவிர பறவை காய்ச்சல்.... தமிழக எல்லைகளில் உஷார் நிலை

  • 6 years ago
பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர வகை பறவை காய்ச்சல் பாதிப்பு பரவியுள்ளது தெரியவந்தது. பெங்களூரின், தாசரஹள்ளி பகுதியில், கோழிக்கடையில் கோழிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தன. சந்தேகமடைந்த கடை உரிமையாளர் விலங்குகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த கோழிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பார்த்தபோது அவை பறவைக் காச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையிலிருந்த எஞ்சிய கோழிகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த பகுதி முழுக்க உள்ள மக்களிடம் உடல் நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து இந்திய அரசு, பாரீசிலுள்ள, உலக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்திருந்தது. அவர்களும் ஆய்வு நடத்தினர். அப்போது இது சாதாரண பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், அதி தீவிர H5N8 வகை வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல் என்றும் தெரியவந்தது.

இந்த அறிக்கை காரணமாக, பெங்களூரில் சிக்கன் விற்பனை குறைந்துள்ளது. மட்டன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே, பெங்களூரிலிருந்து ஒசூர் வழியாக தமிழகம் கொண்டு செல்லப்படும் கோழிகளால் தமிழகத்திலும் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளதால், கர்நாடக அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

India has reported an outbreak of a highly contagious bird flu virus near Bengaluru in Karnataka, the World Organisation for Animal Health (OIE) said on Monday, citing a report from the Indian agriculture ministry.

Recommended