பொங்கலுக்கு தமிழில் வாழ்த்து கூறிய அயல்நாட்டு தலைவர்கள்
  • 6 years ago
பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தைப் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் மிகச் சிறப்பான அளவில் உலகமெங்கும் வகிக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு இனிமையானதாக அமையட்டும்" என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தெரசா மே உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். தெரசா மே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தைப் பொங்கல் விழா தொடங்குவதால் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழையன கழிந்து புதிய வாய்ப்புகளை ஆரத்தழுவிக் கொள்ளும் தருணம் இது. உழவுக்கு மட்டும் நன்றி செலுத்தும் நாள் அல்ல இது நமது உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் அண்டைவீட்டாருக்கும் நன்றி செலுத்தும் நாள் இது.

பிரிட்டன் வாழ் தமிழர்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இது நல்லதொரு வாய்ப்பு. பிரிட்டன் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பு எதிர்பார்ப்பை விஞ்சியது. பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

Prime Minister Theresa May post her twitter page, To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious year ahead. Iniya Thai Pongal Nalvazhthukkal.” - Prime Minister Theresa May.
Recommended