News Wallet | காலையில் நடந்தது என்ன.. ஒரு விறுவிறு பார்வை !!- வீடியோ

  • 6 years ago
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்தம் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களின் குடும்பத்தினரையும் போராட்டக்களத்தில் இறக்கிவிட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
https://tamil.oneindia.com/news/tamilnadu/transport-corporation-employees-involve-their-family-members-strike-307882.html

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்து இருக்கிறது.

ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

Recommended