அரசு பேருந்துகளை பார்த்தாலே தெறித்து ஓடும் மக்கள்- வீடியோ

  • 6 years ago

கடந்த 5 வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பயிற்சி ஓட்டுனர்கள் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமடைந்துள்ள சூழலும் உருவாகியுள்ளது.



ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் என்று தமிழக அரசும் உயர் நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்தும் போராட்டம் தொடந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. பயிற்சி ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுவதால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் ஏற்படுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிகள் ஏறுவதற்கே அச்சமடைந்துள்ளனர்.


இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

பைட்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் தனியார் பேருந்துகள் கடந்த 5 நாட்களாக வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பர்மிட் இல்லாத தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவகிறது. பயணிகளின் குறைகளை போக்க பர்மிட் இல்லாத பேருந்துகளை இயக்கப்படுவதால் அதனை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

பயிற்சி ஓட்டுனர்கள் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆத்திரமடைந்த போக்குவரத்து தொழிலார்கள் பேருந்துகளை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்து மறியலில் ஈடுபட்டனர்...`

Des : For the past 5th day, traffic workers have been stripped of the civilians. The buses are also operated by train drivers, and the fear of traveling to public buses is also evident.

Recommended