மூன்றாவது நாளாக போராட்டம் நீடிப்பு மக்கள் அவதி- வீடியோ

  • 6 years ago
போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தினால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்த அளவு பேருந்துகளை இயக்கப்படு வருகிறது.

ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உள்ளபட பெரு நகரங்களில் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகளும் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று போக்குவரத்து துறை வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையிலான பெஞ்சு விசாரணை செய்தது. அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துறையினர் உடனே பணிக்கு செல்ல வேண்டும் என்றும் இல்லை எனில் அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் சம்மந்தபட்ட பணியார்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் நீதிமன்றம் தங்களின் குறைகளை கேட்காமலும் நிலுவையில் உள்ள தொகையை அரசு வழங்க நீதிபதி உத்தரவிட வில்லை என்று போக்குவரத்து துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் என்றும் போக்குவரத்துறை தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பெரு நகரங்களிலும் தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளதாகவும் போக்குவரத்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended