பஸ் ஸ்ட்ரைக்..களத்தில் இறங்கிய ரோகிணி- வீடியோ

  • 6 years ago
பஸ் சரியா கிடைக்குதா? ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று பயணிகளிடம் கேட்டறிந்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. சேலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளதாக ரோகிணி தெரிவித்தார்.சேலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கட்டணமின்றி தனியார் ஐடி நிறுவன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

சேலத்தில் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ரோகினி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும் பேருந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.


Salem Collector Rohini made a surprise inspection in the bus depots and asked the officials to monitor the smooth functioning of buses without any disturbance to the general public.

Recommended